ஆ. மாதவன் (1934) திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆ. மாதவன். பெற்றோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மாள், ஆவுடைநாயகம். பள்ளி இறுதி வகுப்புவரையில் ம
ஆ. மாதவன் (1934) திருவனந்தபுரத்தில் பிறந்தவர் ஆ. மாதவன். பெற்றோர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த செல்லம்மாள், ஆவுடைநாயகம். பள்ளி இறுதி வகுப்புவரையில் மலையாளக் கல்வி கற்ற மாதவனுக்கு மலையாள இலக்கியப் பரிச்சயம் தந்த வேகம், தமிழ்ப் படைப் புலகின் புதுமைப்பித்தன், க.நா.சு., லா.ச.ரா., தி. ஜானகிராமன், ந. பிச்சமூர்த்தி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி என்றெல்லாம் பரிச்சயம் கொள்ள வைத்தது. மலையாளம் கலந்த தமிழ் பேசும் திருவனந்தபுரத்துச் சாலை கடைத் தெரு வட்டாரமும், அதன் மக்களும் வியாபார உலகில் வாழ்வு நடத்தும் மாதவனுக்கு இலக்கியப் படைப்புச் சக்தியாக அமைந்தனர். 1974இல் வெளிவந்த ‘புனலும் மணலும்’ முதல் நாவல். தொடர்ந்து வெளிவந்த ‘கிருஷ்ணப் பருந்து’ நாவல் போன்றவை திருவனந்த புரத்துத் தமிழ் வாழ்வுச் சலனங்களின் பிரதிபலிப்புச் சித்திரங்களாயின. ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக சாகித்திய அக்காதெமி விருது பெற்றுள்ளார்.
Read More
Read Less
By continuing, you agree to our Terms of Use and Privacy Policy